
இன்று வாசகசாலை அமைப்பின் சார்பாக கடந்த வருடம் யாவரும்/பதாகை வெளியீடாக வந்த “ஒளி” புத்தகத்திற்கு சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது வழங்கப்படுகிறது.
விருதை நேரில் வாங்குவது சாத்தியமாகவில்லை. அதை ஒட்டி ஒரு சிறிய ஏற்புரை மட்டும் அரங்கில் வாசிக்கப்படுவதற்காக எழுதிக்கொடுத்தேன்.
ஏற்புரை
வணக்கம். வாசகசாலை அமைப்பின் சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதை பெறுவதில் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். வாசகரின் உள்ளோத்தோடு உரையாட முடியும் என்பதுதான் எழுத்தாளருக்கு ஆகப்பெரிய மகிழ்ச்சி. அவருடைய ஆற்றல் வெளிப்படுவதும் தர்மம் நிறைவேறுவதும் அவ்வாறுதான். என் ஆரம்ப நூல் ஒன்று வாசகர் மத்தியில் கவனம் பெற்றதும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதிலும் ஓர் எழுத்தாளராக என் இலக்குகள் சார்ந்து நம்பிக்கையும் பிடிப்பும் கூடுகிறது.
இந்த நூலில் பலவிதமான கதைகள் இருப்பதாக வாசகர்கள் கூறுகிறார்கள். என் வரையில், இந்த நூலின் ஒவ்வொரு கதையும் என் தேடல் களத்தில் ஒரு முனையாக பாவிக்கிறேன். என் தேடல்களை எழுத்தாக்க சரியான வெளிப்பாடு முறைகளை கண்டரிந்து அவற்றை எழுத்தில் நிகழ்த்துவதே இனிவரும் காலத்தில் நான் செய்யும் பணியாக இருக்கப்போகிறது. இந்தப்பயணத்தில் வாசகர்கள் என்னுடன் வரவேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். வாசகசாலை அமைப்புக்கு நன்றி.
You must be logged in to post a comment.