செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – ஒரு மறுப்பு
நண்பர், மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ் குமார் தன்னுடைய நேர்காணலில் மொழியாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பற்றிய கருத்துகளை நீக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கம்.
இந்த விவகாரத்தைக் குறித்து நண்பர், மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா எழுதிய மறுப்பும் தன்னளவில் முக்கியமானது. இச்சர்ச்சையைத் தாண்டி, இன்று இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கை பற்றிய பொது விவாதத்திலும் அவருடைய கருத்து முக்கியத்துவம் பெருகிறது.
ஜெகதீஷ் குமாருடனான நேர்காணலை வெளியிட்ட மொழிபெயர்ப்பாளர் நண்பர் விசுவிடம் இந்த சர்ச்சை குறித்துப் பேசினேன். அப்போது, இந்த விவாதம் குறிப்பிட்ட இக்கருத்து பற்றிது மட்டும் என்று கருதாமல், ஒட்டுமொத்தமாக இலக்கியச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் இடம் என்ன என்ற இடத்தை நோக்கி நகர்ந்தால் நல்லது என்று சொன்னேன். செயற்கை நுண்ணறிவின் ‘கருப்புப் பெட்டி’க்குள் என்ன நடக்கிறது, அதன் ‘சிந்தனை’ என்பது உண்மையில் என்ன போன்ற அடிப்படை விஷயங்களையும் நாம் அறிந்தாகவேண்டிய நேரம் வந்துள்ளது. அத்துறையில் வல்லுனர்களான விசு போன்ற இலக்கிய நண்பர்கள் இதைப் பற்றி எழுத முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். விசு அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் பற்றிய அவருடைய பார்வை.
இந்த விவாதத்தைத் தாண்டி, தன் படைப்பை எழுதும் விருப்பத்துடன் செயல்படும் ஓர் இளம் எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவை எப்படிக் கருதலாம், அதை எவ்வாறு பயன்படுத்தலாம், பயன்படுத்தாமல் இருக்கலாம், அடிப்படையில் ஏ.ஐ.க்கும் மனிதனின் சுயம் அல்லது தன்னிலைக்குமான உறவென்ன போன்ற கேள்விகளை திறந்தமுறையில் பரிசீலித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
*
1 thought on “செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – தொகுப்பாக”
Comments are closed.