செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும் – ஒரு மறுப்பு

“மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் ஏ.ஐ ஒரு வரம் என்றே கருதுகிறேன். இன்று எந்த மொழிபெயர்ப்பாளரும் பேப்பர், பேனா வைத்துக் கொண்டு, மூல நூலைத் திறந்து வைத்து வரிக்கு வரி மொழிபெயர்ப்பதில்லை என்று சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தி ஒரு பாராவின் தோராயமான வடிவம். பின்னர் மொழிபெயர்ப்பாளரின் மொழி அறிவைக் கொண்டு திருத்தி எழுதுதல் என்றுதான் மொழிபெயர்ப்புச் செயல்பாடு இருக்கிறது. ஏ.ஐ என்பது கூகுளைவிட மேலும் தேர்ந்த ஒரு மொழிபெயர்ப்புச் சாதனம் என்ற புரிதல் … Read more