முக்கடல் முத்து

இஸ்லாம் உள்ளிட்ட பல இடைக்கால சமூகங்களில் பால் பந்தம் என்ற உறவுமுறை இருந்தது. அதாவது ஒரே தாயிடம் பால் குடித்து வளர்ந்த இருவர் தங்களை சகோதரர்களாகக் கருதிக்கொள்ளும் வழக்கம். இன்று குமரித்துறைவியின் தெலுங்கு மொழி மொழியாக்கம் குறித்து நண்பர் ராஜூ எழுதியுள்ள இக்கடிதத்தை வாசித்தபோது இவர் என் பால் சகோதரர் அல்லவா என்ற உணர்வெழுச்சி ஏற்பட்டது. மொழியாக்கக்காரர்களின் சிறிய இன்பங்களில் ஒன்று தாங்கள் மொழிபெயர்த்த நூலைக்குறித்து அதே நூலை பிறமொழிகளில் மொழியாக்கம் செய்தவர்களுடன் உரையாடுதல். அவ்வின்பத்தின் பலபடி … Read more