மொழியாக்கமும் படைப்பாக்கமும் [உரை]

[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்]

(21 அக்டோபர் அன்று ஈரோடு நண்பர்கள் சந்திப்பில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த சந்திப்புக்கு நண்பர் கிருஷ்ணன் அவர்கள் அழைத்தபோது, மொழியாக்கம் தொடர்பாக ஒரு சிறிய நண்பர் உரையாடல் என்ற அளவில் அமையும் என்று சொன்னார். ஆனால் எதிர்பார்த்ததை விட நண்பர்கள் பதிவுசெய்ததால், ஓர் உரையுடன் தொடங்கலாம் என்று முடிவானது. நம்முடைய நண்பர் சந்திப்புகளின் இயல்பு தீவிரமான ஒரு விஷயத்தை செறிவாகப் பேசி அதன் மேல் விவாதம் மேற்கொள்ளுதல். அந்த வகையில், தன்வயமான உரையாக அல்லாமல், புறவயமாக, மொழியாக்கம் என்றால் என்ன, மொழியாக்கத்தை தத்துவார்த்த படுத்த முடியுமா என்ற கேள்வியை இங்கே சற்று பரிசீலித்துப் பார்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இதைப்பற்றி இதுவரை வெளிப்படுத்தாத சற்று தயக்கம் மிகுந்த சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. அணுக்க நண்பர் கூடுகை என்பதால் இந்தச் சபையில் அவற்றை வெளிப்படுத்தத் துணிகிறேன். மொழியாக்கத்தில் உள்ள ஆக்கச் செயல்பாடு என்ன, அதன் படைப்பூக்கம் எப்படிப்பட்டது என்று இந்த பேச்சு வழியாக ஒரு சிந்தனைப் பயணம் மேற்கொண்டு சற்று விசாரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

Read more

ஒரு முதிராக் காதல்

பதின்பருவத்தின் ஒரு முதிராக் காதலின் நினைவு போல என் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்குள் உள்ளது. பதின்பருவத்து காதலைப்பற்றி எண்ணும் போது அப்போதைய முதிர்ச்சியின்மையின் நினைவுகளால் உருவாகும் ‘கிரிஞ்ச்’ உணர்வை அடைந்தாலும் அந்நினைவுகளில் ஓர் உவகையும் இல்லாமல் இருக்காது. அதைப்போலத்தான் முதல் தொகுப்பும். இது நடந்திராமல் இருக்கலாம் என்று தோன்றுகிறது. சரி அதுதான் நடந்துவிட்டதே, போகட்டும் என்ன குறைந்துவிட்டது என்று அடுத்தக்கணமே தோன்றுகிறது. பிறகு அது நிகழ்ந்தபோது அனுபவமான இனிமைக்கணங்களை – இனிமைக்கணங்களை மட்டும் – ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல நினைவு தீண்டித் திறந்துப் பார்க்கிறது. உவகை, லஜ்ஜை, அசட்டுச்சிரிப்பு. முதல் தொகுப்பை பற்றி எண்ணும்போதெல்லாம் இந்த பரிதவிப்பும் பரவசமும் தான் மாறி மாறித் தோன்றுகின்றன. இன்று நீலி இதழில் என் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’யைப் பற்றி நண்பர் சக்திவேல் எழுதியிருக்கும் குறிப்பை வாசித்தபோது இவ்வுணர்வுகளை என் மனம் உருவகித்து வளர்த்த விதத்தை சற்று ஆச்சரியத்துடன் பின் தொடர முடிந்தது. சொல்லப்போனால் அதுவே ஓர் இனிமையான அனுபவமாக இருந்தது. 

Read more

ஒரு தலைமுறையின் விதி

[நன்றி: நீலி இணைய இதழ்]

பகுதி – 1

தூரங்கள்

1

தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக் அகாடெமி என்ற சங்கீத வித்வத் சபையில் பலத்த எதிர்ப்பை மீறி ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் நோக்கம் ஒன்று தான் — சதிர் என்றும் தாசியாட்டம் என்றும் அப்போது அழைக்கப்பட்ட நடன வடிவை ஒரு கலையென மக்கள் முன் அறிமுகப்படுத்தி அரங்கேற்றுவது. 

ஈ. கிருஷ்ண ஐயர்

Read more

சிறுகதை: மதுரம்

[நன்றி: அகழ்] “தேனுன்னா?” ராதிகாவின் கண்கள் விரிந்தன. “தேனுன்னா தேன், இனிப்பா” என்றார் பெரியம்மா. மலர்களில் ஊரும் தேனை மட்டுமே உண்டு பட்டாம்பூச்சிகள் உயிர்வாழ்கின்றன என்ற தகவல் ராதிகாவுக்கு அன்று தான் தெரியவந்திருந்தது. நான்கு வயதான அவளுக்கு பட்டாம்பூச்சிகளை தெரியும். மலர்களையும் தெரியும். ஆனால் அவற்றுக்கிடையே தேன் என்ற கண்ணுக்குத்தெரியாத பொருள் ஊடாடியது அப்போது தான் தெரிந்தது. அன்று பெரியம்மாவின் நந்தவனத்தில் மலர்களையும் பட்டாம்பூச்சிகளையும் பார்த்தபோது அவற்றுக்கிடையே தங்க ரிப்பன் இழைகள் போல தேன் பறந்ததாக அவளுக்குத் … Read more

ரோம், கிரேக்கம், உலகம் — ஒரு விவாதம்

[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்] அன்புள்ள ஜெ, ரோம் பயணம் முடிந்தது. மீண்டுக்கொண்டிருக்கிறேன். மிக அரிய கண்டடைதல்கள் சிலவற்றை இந்தப் பயணம் வழியாக அடைந்தேன் என்று சொல்லத் துணிவேன். அதை என்னவென்று ஒரு கடிதத்தில்  சொல்லமுடியுமா தெரியவில்லை. தீவிரம் பற்றிக்கொண்டு  எழுதிக்கொண்டிருக்கிறேன். விரிவாகவே பதிவுகள் வருகின்றன. காலம், வரலாறு, கலை, தெய்வீகம்… எழுத எழுத அந்த ஏழு நாள் கனவிலிருந்து நானே விரவி விரவி எழுந்து வளர்வது போன்ற உணர்வை அடைகிறேன். * இந்தப் பயணத்தில் என்னை மிகவும் … Read more

நீலி நேர்காணல்: ”இலக்கியத்தின் ரகசிய ஓடைகளை நம்பித்தான் எழுத்தும் மொழியாக்கமும் செய்யப்படுகிறது”: சுசித்ரா

[நேர்காணல் : நீலி] (தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு உலகம் & The Abyss சார்ந்து உரையாடல்) சுசித்ரா தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’ வெளியானது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். 2017-ல் Asymptote புனைவு மொழியாக்கத்துக்கான சர்வதேச பரிசை “பெரியம்மாவின் சொற்கள்” சிறுகதை மொழியாக்கத்திற்காக பெற்றார். இந்திய இலக்கியங்களுக்கிடையேயான உரையாடலை மொழிபெயர்ப்பு மூலமாக முன்னெடுத்துச் செல்ல மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதாவுடன் இணைந்து “மொழி” தளத்தை நிறுவியுள்ளார். அருணவா சின்ஹாவை ஆசிரியராகக் கொண்ட South Asia … Read more