எம்.டி.யை பற்றி எழுதிய சிறிய அஞ்சலிக் குறிப்பு

ஏப்ரல் 6-ஆம் தேதி திங்கட்கிழமை காலை பதினோறு மணிக்கு நியூ ஜெர்சியில் அமைந்த கோர்ட்யார்ட் மேரியட் விடுதியிலிருந்து நியூ யார்க் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த நண்பர் பழனி ஜோதி அந்தக் கதையைச் சொன்னார். “பத்தடி உயரம். ஈசியா மடிச்சு சூட்கேஸ்ல போட்டுட்டு வந்திட்டாரு. காம்பிரமைஸே இல்லாம அந்தந்த அரங்குக்கு பின்னால விரிச்சு மாட்டியிருக்கணும்ன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு. “நியூ யார்க் அகாடமி ஆஃப் மெடிசின்ல நம்ம தொடக்க நிகழ்ச்சி … Read more
Written as an exercise in clarity ahead of a literary festival celebrating modern Tamil literature and translation in New York City, circa 2026. 1 ‘Ma’am, are you aware we are in the middle of an International Situation?’ he asked. He was wearing a pin-striped shirt: thin, dark-blue stripes on an earth-blue body. Oval, black-rimmed glasses, … Read more
Jeyamohan’s The Daughter of Kumari, my English translation of his Tamil novel குமரித்துறைவி / Kumarithuraivi, was published recently. Purchase link: Amazon From 2014 to 2020, over a period of six years, Jeyamohan wrote a modern Tamil epic, a novel series called Venmurasu based on the Mahabharatha. A creative re-narration of the classical epic, Venmurasu draws … Read more
(An essay on The Daughter of Kumari, originally published in Tamil, Kurugu, Dec 2025) When gods play with men, then can’t men play with the gods too? Both plays happen all the time. One play reflects the other, like images in a mirror, multiplying endlessly. The gods are creatures of endless, boundless play. They play … Read more
The Daughter of Kumari: Translator’s Afterword It is not often that one gets the chance to work on a book that’s creative literature, performance, ritual and a play with the gods, all at once. Translating this book gave me a certain intuition about translation and creativity: that translation, too, is literary performance, ritual and play, … Read more
போன வருடத்தின் டைரியை புரட்டிக்கொண்டிருந்தேன். பிப்ரவரி 8, 2024, அன்று எழுதிய குறிப்பு கண்ணில் தென்பட்டது. ‘அசோக மரம் பூத்திருக்கிறது’ என்று எழுதியிருக்கிறேன். இன்று வளாக எல்லைகளில் நடப்படும் நெடிய அலங்கார மரத்தைத்தான் அசோகா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. நீளமான, நெளிந்த விளிம்புகளுடைய இலைகள் கொண்ட மரம். ஆனால் செவ்வியல் பழமை கொண்ட அசோகமரம் இதுவல்ல. Saraca asoka என்று பெயருடைய அந்த மரம் மிக நளினமான தோற்றம் கொண்டது. அதன் அடிமரம் மெலிதானது. கிளைகள் … Read more
Jeyamohan’s classic Tamil short story ‘Pradhaman’ (பிரதமன்) was recently published in translation in a print-only little magazine called South Parade. The story is reprinted here with their permission.
About South Parade:
Edited by Arshia Sattar, Indira Chandrasekhar, Rahul Soni, Sohini Basak and Trupti Prasad, South Parade is a twice-yearly print-only magazine of contemporary literature, arts and culture from the global south. Although the global south has often been the focus of different publications from different continents and cultures, it has rarely been done in a sustained fashion through the lens of literature. South Parade’s editorial mission is to showcase important voices – emerging, established, overlooked – from the region.
[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்]

(21 அக்டோபர் அன்று ஈரோடு நண்பர்கள் சந்திப்பில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)
நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த சந்திப்புக்கு நண்பர் கிருஷ்ணன் அவர்கள் அழைத்தபோது, மொழியாக்கம் தொடர்பாக ஒரு சிறிய நண்பர் உரையாடல் என்ற அளவில் அமையும் என்று சொன்னார். ஆனால் எதிர்பார்த்ததை விட நண்பர்கள் பதிவுசெய்ததால், ஓர் உரையுடன் தொடங்கலாம் என்று முடிவானது. நம்முடைய நண்பர் சந்திப்புகளின் இயல்பு தீவிரமான ஒரு விஷயத்தை செறிவாகப் பேசி அதன் மேல் விவாதம் மேற்கொள்ளுதல். அந்த வகையில், தன்வயமான உரையாக அல்லாமல், புறவயமாக, மொழியாக்கம் என்றால் என்ன, மொழியாக்கத்தை தத்துவார்த்த படுத்த முடியுமா என்ற கேள்வியை இங்கே சற்று பரிசீலித்துப் பார்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இதைப்பற்றி இதுவரை வெளிப்படுத்தாத சற்று தயக்கம் மிகுந்த சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. அணுக்க நண்பர் கூடுகை என்பதால் இந்தச் சபையில் அவற்றை வெளிப்படுத்தத் துணிகிறேன். மொழியாக்கத்தில் உள்ள ஆக்கச் செயல்பாடு என்ன, அதன் படைப்பூக்கம் எப்படிப்பட்டது என்று இந்த பேச்சு வழியாக ஒரு சிந்தனைப் பயணம் மேற்கொண்டு சற்று விசாரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
பதின்பருவத்தின் ஒரு முதிராக் காதலின் நினைவு போல என் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்குள் உள்ளது. பதின்பருவத்து காதலைப்பற்றி எண்ணும் போது அப்போதைய முதிர்ச்சியின்மையின் நினைவுகளால் உருவாகும் ‘கிரிஞ்ச்’ உணர்வை அடைந்தாலும் அந்நினைவுகளில் ஓர் உவகையும் இல்லாமல் இருக்காது. அதைப்போலத்தான் முதல் தொகுப்பும். இது நடந்திராமல் இருக்கலாம் என்று தோன்றுகிறது. சரி அதுதான் நடந்துவிட்டதே, போகட்டும் என்ன குறைந்துவிட்டது என்று அடுத்தக்கணமே தோன்றுகிறது. பிறகு அது நிகழ்ந்தபோது அனுபவமான இனிமைக்கணங்களை – இனிமைக்கணங்களை மட்டும் – ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல நினைவு தீண்டித் திறந்துப் பார்க்கிறது. உவகை, லஜ்ஜை, அசட்டுச்சிரிப்பு. முதல் தொகுப்பை பற்றி எண்ணும்போதெல்லாம் இந்த பரிதவிப்பும் பரவசமும் தான் மாறி மாறித் தோன்றுகின்றன. இன்று நீலி இதழில் என் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’யைப் பற்றி நண்பர் சக்திவேல் எழுதியிருக்கும் குறிப்பை வாசித்தபோது இவ்வுணர்வுகளை என் மனம் உருவகித்து வளர்த்த விதத்தை சற்று ஆச்சரியத்துடன் பின் தொடர முடிந்தது. சொல்லப்போனால் அதுவே ஓர் இனிமையான அனுபவமாக இருந்தது.
You must be logged in to post a comment.