மைத்ரி – முன்னுரை

அஜிதனின் மைத்ரி நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை இயற்கையின் தெய்வீகம் நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல் முறை. அவர்கள் முன் கம்பீரமாக எழுந்து நின்றது பனிமலை, வெண்முகில்கள் சூழ்ந்து நின்றன அதன் சிகரங்கள். நித்யாவின் பரவசத்தை கண்ட நடராஜ குரு, “இதோ இந்தப் பேரழகின் தரிசனமே காளிதாசனை கவிஞனாக்கியது” என்றார். “ஒருவன் இந்தக் காட்சியை … Read more

மேலங்கி – ஐசக் தினேசன் (மொழியாக்க சிறுகதை)

(வல்லினம் இதழில் வெளியான சிறுகதை) மலைகளின் சிங்கம் என்று அறியப்பட்ட மூத்த சிற்பியான லியோனிடாஸ் அல்லோரி ராஜதுரோக குற்றச்சாட்டின் பெயரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய மாணவர்கள் கலங்கிப்போய் அழுது ஓலமிட்டார்கள். அவர்களுக்கு அவர் ஞானத்தந்தை. தேவதூதர். காலத்தை வென்ற அமரத்துவர். ஊருக்கு வெளியே பியெரினோவின் விடுதியில் சிலரும் கலைக்கூடங்களில் சிலரும் வீட்டுப்பரன்களில் சிலரும் என்று மறைவான இடங்களாக பார்த்து அல்லோரியின் மாணவர்கள் சிலர் கூடிக்கூடி அழுதார்கள். மற்றவர்கள் சேர்ந்து தங்கள் பிரியத்துக்குறிய ஆசிரியருக்கு விடுதலையும் … Read more

அருவருப்பின் அழகியல்

அசோகமித்திரன் ஜெயமோகனைப்பற்றி 2006-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு மதிப்புரையில் [சுட்டி] ஜெயமோகனின் கதைகளில் அடிக்கடி தோன்றும் ‘அருவருப்பு’ அல்லது ‘பீபத்சம்’ என்ற அம்சத்தை சுட்டிக்காட்டுகிறார். அந்த அம்சத்தின் சரடு நம் மரபில் என்றும் இருந்துள்ளது என்றும் கதா சரித சாகரம் போன்ற நூல்களில் வெளிப்படுவதாகவும் ஆனால் அதற்கு இங்கு தொடர்ச்சி கிடையாது என்றும் கூறுகிறார். இந்தக்கூறுகளின் தொடர்ச்சி ஜெயமோகனில் வெளிப்படுவதாக சொல்கிறார்.  ஜெயமோகனின் புனைவுகளை வாசித்தவர்களுக்கு தொடர்ந்து அவருடைய கதைகளிலும் நாவல்களிலும் இடம்பெறும் பீபத்சச் சுவை கூடிய … Read more

எழுத்தாளர் அருண்மொழிநங்கை – வல்லினம் நேர்காணல்

எழுத்தாளர் அருண்மொழிநங்கை அவர்களை வல்லினம் இலக்கிய இதழுக்காக நான் எடுத்த நேர்காணல் [நன்றி : வல்லினம்] * கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும் மிகமிக நெருக்கமானார்கள். எங்கள் உரையாடலின் நீட்சியாக ஒரு நேர்காணல் எடுக்கலாமா என்று கேட்டேன். வாட்சாப்பின் ‘வாய்ஸ் நோட்‘ செயலி வழியாக, பத்து நாள் காலத்தில், நாகர்கோயிலில் அவர்களும் பாசலில் நானுமாக, கிடைத்த நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்குமாகக் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டோம். அவ்வாறு நிகழ்ந்தது இந்த நேர்காணல். அங்கே இப்போது பெய்யும் துலாவர்ஷ … Read more

Goat Milk Puttu – A.Muttulingam [Translation]

A translation of Tamil writer A.Muttulingam’s short story ‘Goat Milk Puttu’ into English, published in Narrative Magazine. ALL THIS HAPPENED in Ceylon, long before its name was changed to Sri Lanka. In those days they just called it the Post and Telegraph Service. They had not yet invented grand terms like Postal Department, Division, and so on. Every … Read more

டேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு

[நன்றி : jeyamohan.in] மனிதன் உருவாக்கக்கூடிய எந்த உச்சபட்ச கலைகளுக்கும் நிகரான அனுபவத்தை ஒரு தூய விலங்கு அதன் முழுமையில் வெளிப்படுகையில் நம்மில் உருவாக்குகிறது. விலங்குகளின் தூய வெளிப்பாட்டை அதன் நிலத்தில் வைத்து படைப்பூக்கத்துடன் படம்பிடிக்கையில் அது ஒரு மகாகலைஞனின் படைப்புக்கு நிகரான கலைப்படைப்பாக நிற்கும் என்பதை டேவிட் அட்டன்பரோ கதைசொல்லும் இயற்கை ஆவணப்படங்களே எனக்குக் கற்பித்தன. அதன் உச்சமாக சமீபத்தில் ‘Dynasties’ (வம்சங்கள்) என்ற தொலைக்காட்சித் தொடர் இடம்பெற்றது. இந்தத்தொடர் இந்தியாவில் SonyLIV தளத்தில் காணக்கிடைக்கிறது. இத்தொடரை ‘எபிக்’ … Read more

இறுதி யாத்திரை [சிறுகதை]

சங்கரலிங்கம் தன்னைக் கண்ணாடியில் பார்த்தார். வலதுபுறக் கன்னம் மேலே எழுந்திருந்தது. நாக்கு மெல்ல நகர்ந்து மேலுதட்டுக்கடியில் ஊறி மறுபக்கமாகக் கீழிறங்க நரைத்த முடி முகத்தில் கொத்துக்கொத்தாக எழுந்தெழுந்து அடங்கியது. பெருமூச்சுடன் நாற்காலியில் பின்னால் சாய்ந்துகொண்டு கைகாட்டினார். “ஆரம்பிக்கலாம்” [மேலும் வாசிக்க] நன்றி – அரூ இணைய இதழ்

படைப்பில் ஒருமை – ரவீந்திரநாத் தாகூர் [மொழியாக்கம்] – 2

படைப்பில் ஒருமை [1] – அறிமுகம் 2 படைப்பின் இலட்சியம் [குறிப்பு – இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலக் கவிதை மேற்கோள்களை அப்படியே அளித்திருக்கிறேன். கவிதையின் கூறுகளை விளக்க ஆசிரியர் அவற்றை பயன்படுத்துகிறார், ஆகவே அவற்றின் வடிவத்தோடு அப்படியே வாசிக்கும் அனுபவமே சரியாக இருக்கும். வங்காள, சம்ஸ்கிருத வரிகள் கட்டுரையின் மையக்கருத்துகளை கவித்துவமான எழுச்சியோடு வெளிபடுத்தும் விதமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். —மொழிபெயர்ப்பாளர்] பண்டைய சம்ஸ்கிருத நூலொன்றில் ஒரு செய்யுள் உள்ளது. ஒரு சித்திரத்தின் … Read more

படைப்பில் ஒருமை – ரவீந்திரனாத் தாகூர் [மொழியாக்கம்] – 1

[1] அறிமுகம் “நான் இங்கே இருக்கிறேன்” என்பது மிக எளிமையான அறிதல். அதை அறிய எனக்கு எந்த விஷேஷப் பிரயத்தனமும் செய்தாகவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘நான்’ என்ற இந்த ‘என்னை’ உருவாக்கும் எண்ணிற்கடங்காத பௌதீக, வேதியிய, உயிரிய, உளவியக் கூறுகளை நான் பகுப்பாய்வு செய்ய முற்பட்டால், அந்தத் தேடல் எல்லையில்லாத ஒன்றாக ஆகிவிடும். நான் என்பது எனக்குள் நான் உணரும், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு மர்மநிலை. அலகிலாததன் எளிமை அதில் உள்ளது. விரிந்து விரிந்து உடைந்து … Read more

Vanangaan [Translation]

A translation of B.Jeyamohan’s Tamil short story Vanangaan (2015). The Tamil story can be read here. My name is Vanangaan. It means ‘he who does not bow’, a stubborn stiffneck. Yes, that’s really my name. If you want my full name, it’s K.Vanangaan Nadar. No, it’s not my clan-god’s name or anything like that. No … Read more