How I Became a Writer – Gabriel Garcia Marquez

(Originally published in New Yorker magazine, Oct 6, 2003) “In any case, that story already belongs to the past,” he concluded. “What matters now is the next one.”   I never imagined that, nine months after I had completed secondary school, my first story would be published in Fin de Semana, the weekend literary supplement of El Espectador, … Read more

சிறுகதை – ஒளி

அழகுக்கடைக்கு முன்னால் ஒரு ஆண்பிள்ளை இவ்வளவு நேரமா நிற்பது? ஃபிலோமினா பொறுமையிழந்தாள். கூட்டத்திலிருந்து நகர்ந்து பத்ரகாளிக்கு அடியில் போய் கைகட்டிக்கொண்டு நின்றாள். அவள் தலைக்கு மேல் தூணின் பொந்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கின் தீ காற்றில் படபடத்தது. எதிரே ஊர்த்வதாண்டவர் ஒரு காலை தூக்கி மறந்துவிட்டவர்போல் கனவில் ஆழ்ந்திருந்தார். ஆரன் உடைந்த தமிழில் உற்சாகமாக பேரம்பேசிக்கொண்டிருந்தான். ஃபிலோமினா அங்கு இல்லை என்று உணர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்து அவளை கண்களால் அடைந்து, “உனக்கு எதுவுமே வேண்டாமா? நிச்சயமா?” … Read more

சிறுகதை – ஒரு மழைநாள்

(நன்றி – சொல்வனம்) நான் சிறுவனாக இருந்தபோது மதுரையில் நிறைய மழைபெய்ததாக நினைவு. ஆம், சித்திரை, ஆடி, ஐப்பசி, மார்கழி என என் நினைவுகளின் மதுரை மழை அலுக்காத ஊராகவே இருக்கிறது. என் நினைவுகளில் கண்மாய்க்கள் நிரம்பி வழிகின்றன; வைகையில் வெள்ளம் பெருகிப் புரண்டு செல்கிறது. ஊரே புதிதாய் பிறக்கிறது. அல்லது மழை நாட்களும் வெள்ளப்பெருக்கும் மட்டுமேயான நினைவுகளாக என் நினைவுகள் இருக்கலாம். ஏனென்றால் சிறுவயதில் மழைநாட்கள் மாயம் நிறைந்தவை. மண்ணை உசுப்பிவிட்டு புதையுண்ட வாசங்களையும் பெயரறியா … Read more

சிறுகதை – ஹைட்ரா

(நன்றி – பதாகை இதழ், அக்தோபர் 2019 ) பின்மதிய இடைவேளையில் அட்சயாதான் வந்து சொன்னாள். “ஐஷூ ரொம்ப அழறாப்பா. என்னன்னே தெரீல…” கண்கள் விரிய லட்சுமி ஒரு கணம் அவளை ஏரிட்டுப் பார்த்தாள். காற்றில் தும்பிக்கைகள் அலைய வினோத்தின் ரெக்கார்ட் நோட்புக்கில் ஹைட்ரா படத்தை வரைந்துகொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு அட்சயாவுடன் ஓடினாள். அப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் காலை பத்தரை மணி இடைவேளையில், அது முடியவில்லை என்றால் லஞ்ச் பிரேக்கிலாவது,  லட்சுமி ஐஷ்வர்யாவை சென்று பார்த்துவிடுவாள். அல்லது … Read more

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்

(2019 ஊட்டி குரு நித்யா காவிய முகாமில் பேசியதன் கட்டுரை வடிவம். நன்றி: jeyamohan.in) அறிவியல் புனைகதை என்ற வடிவை பற்றி சுறுக்கமாக பேசி அதனை ஒட்டி ஒரு விவாதத்தை முன்னடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். அறிவியல் புனைகதை என்ற இலக்கிய வடிவம் அடிப்படையில் நவீன அறிவியலைச் சார்ந்து உருவாகி வந்துள்ள ஒன்று. நவீன அறிவியல் மேற்கத்திய அறிவியக்கத்தின் குழந்தை. மேற்கத்திய அறிவியக்க வரலாற்றை புரிந்துகொள்ளாமல் அறிபுனையின் இடம், அதற்கான வரலாற்றுத் தேவை,  அதன் வகைமைகள், எல்லைகளை நோக்கிச் செல்ல … Read more

சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை

(சொல்வனம் – 200: எழுத்தாளர் அம்பை சிறப்பிதழில் பிரசுரமான கட்டுரை. நன்றி: சொல்வனம்) கடற்கரையை ஒட்டிய ஊர் ஒன்றில் ஒரு சவுக்குத்தோப்பு இருந்தது. அவ்வப்போது மரம்வெட்டிகள் வந்து அந்த தோப்பிலிருந்து ஒரு சில மரங்களை வெட்டி எடுத்துச்சென்று கப்பல்கட்டுபவர்களிடம் விற்பார்கள். கப்பல்கட்டுபவர்கள் மரங்களை பாய்மரங்களாக செதுக்கி கப்பல்களில் பொருத்துவார்கள். அவை கப்பலுடன் சேர்ந்து கடலில் பயணிக்கும். தோப்பில் இருந்த எல்லா மரங்களும், தாங்களும் பாய்மரங்களாக செதுக்கப்பட்டு, கப்பலோடு இணைந்து தூரதூர தேசங்களை காணச்செல்வோம் என்று நினைத்தன. அந்நாளை … Read more

சிறுகதை – நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை. முதன்முறை தெரியாத்தனமாகத்தான் தின்றேன். அப்போது பதினைந்து வயதிருக்கும். ஒருநாள் தூக்கம் வரவில்லை. மொட்டைமாடிக்குச் சென்றேன். அன்றிரவு அந்த நட்சத்திரம் மாதுளைப்பழத்தைப்போல் வீங்கி இருட்டில் சிவப்பு ஒளி வீச பழுத்துத் தொங்கியது. அணில் வந்துவிடப்போகிறதே என்ற பயத்தில் யோசிக்காமல் அவசரமாக எம்பிப் பறித்துவிட்டேன். அணில்கள் எங்கள் வீட்டில் வாடகை கட்டாமல், ஏழெட்டு … Read more

சிறுகதை: யாமத்தும் யானே உளேன்

(அரூ இதழின் 2019 அறிவியல் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை) இருளாழத்துக்கு மறுபக்கமாக எங்கேயோ இங்குள்ள கதைகளெல்லாம் காத்துக்கொண்டிருக்கின்றன. அவை இரவெல்லாம் ஒன்றுடன் ஒன்று கைகோத்துச் சுருண்டு ஒளிப்பந்தாக உறங்குகின்றன. அவை ஒன்றை ஒன்று தழுவிக்கொள்கின்றன. விரல்பின்னி மூச்சிசைந்து நெஞ்சதிர்வுகள் இணைய நிசப்தத்தில் கனவு காண்கின்றன. இங்குள்ளவளின் உள்ளம் சுற்றிச்சுழன்று வந்து அவர்களை அடைவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன அவை. அவள் இருளின் கவசங்களை அவனறியாமலேயே மெல்ல, இரவெல்லாம் பொறுமையாக, அவிழ்த்துக் களையும் கலை அறிந்தவள். மெல்லப் படிவைத்து … Read more

Short story – The blue eye

The greatest storyteller of all, the old crab-crone, sits brown and withered on the searock, like one of the salt-streaked ferns clinging to its sides; the spray of the seafoam tosses against her hunched back and turtly neck, and streams down her shriveled breasts like silvered locks, gleaming with the wisdom of all the added … Read more

மொழியாக்கம்: எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி

(மூலம் – வங்காளம். அருணாவா சின்ஹாவின் ஆங்கில மொழியாக்கம் வழியாக தமிழில்) …இங்கு எப்படி வருவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. எரிகல் ஏரி இந்த மாவட்டத்தில் தான் எங்கோ உள்ளது. ஆனால் சரியாக எந்த இடத்தில் என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக கிராமத்து மக்கள் அவர்களுடைய சுற்றுவட்டாரப்பகுதிளை பற்றியோ, மிஞ்சி மிஞ்சி போனால் அண்டை கிராமங்களை பற்றியோ தெரிந்து வைத்திருப்பார்கள், அவ்வளவுதான். மும்பையிலிருந்து ஜால்னாவுக்கு ஒரு ரயில்வண்டி உள்ளது, பாஸஞ்சர் வண்டி. ஜால்னாவில் இறங்கியிருந்தால் அங்கிருந்து … Read more